இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனித புதைகுழியான மன்னார் மனித புதைகுழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறார் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 26இற்கும் மேல்
அதிகரித்துள்ளது.இன்றைய தினம் வரை 26 சிறார்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மொத்தமாக மன்னார் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 312 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 297 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் 23 எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்த எச்சங்களில் 6 மாதிரிகள் கால நிர்ணய பரிசோதனைக்காக கடந்த ஜனவரி 23ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள காபன் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கவுள்ளது.
பரிசோதனை அறிக்கையை தனக்கும் மன்னார் நீதவானுக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு ஆய்வு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட சட்ட வைத்திய அதிகாரியான சமிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.மன்னார் மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.