வெனிசுவேலா விவகாரத்தில் கனேடிய அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வருவதாக நாட்டின் பிரதான தொழிற்சங்க ஒன்றியம் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
வெனிசுவேலாவின் இடைக்கால அரச தலைவராக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குஐடோவை அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
மக்களினால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலாவின் அரச தலைவர் நிகலோஸ் மடுரோவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கனடா உள்ளிட்ட நாடுகள் சுமத்தி வருகின்றன.
எவ்வாறெனினும், கனேடிய அரசாங்கம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என cupe) எனப்படும் கனடாவின் பொதுத் துறை ஊழியர் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
இறைமையுடைய வெனிசுவேலா நாட்டின் உள்விவகாரங்களில் கனடா தலையீடு செய்வது எந்த வகையில் பொருத்தமானது என்று தொழிற்சங்க ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரிதொரு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கனடா தலையீடு செய்வது எந்த வகையிலும் பொருந்தக்கூடியதல்ல என்று ஊருPநு சுட்டிக்காட்டியுள்ளன.