வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னுடனான இரண்டாவது உச்சிமாநடு வியட்னாமில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் நாட்களில் நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் அறிவித்துள்ளார்.
வட கொரியா விடயத்தில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படவேண்டியுள்ளதாகவும், இருந்தபோதிலும் கிம் ஜொங் உன்னுடனான தமது உறவு நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இராணுவ தாக்குதல்களினால் தனது அணுவாயுதங்கள் மற்றும் ஏவுகணை கட்டமைப்புக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருப்பதனை உறுதி செய்யும் முனைப்புக்களில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்றம்ப் உடனான முதலாவது உச்சிமாநாட்டில் முற்றான அணுவாயுதக் களைவுக்கு ஹிம் சம்மதம் வெளியிட்ட போதிலும், வடகொரியா அணுவாயுதங்களை பேணி வருகின்றது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.