சர்வதேச மன்னிப்புச் சபையின் பணியாளர்கள் பல்வேறு முறைகேடுகளுக்கு இலக்காகி வருவதாக முக்கிய புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடுக்குமுறைக்கு உட்படுத்தல், பொது இடங்களில் இழிவுபடுத்தப்படல் மற்றும் அவதூறு செய்தல் உள்ளிட்ட சம்பவங்களினால் பணியாளர்கள் பாதிக்கப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகின் மனித உரிமைப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் முதனிலை நிறுவனங்களில் ஒன்றாக சர்வதேச மன்னிப்புச் சபை கருதப்படுகின்றது.
அழுத்தங்களை தாங்கிக் கொள்ள முடியாது இரண்டு பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.