தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயம் தொடர்பிலான ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனை தொடர்பில் நாளைய தினம் வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் கருஜெயசூரிய இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றில் இந்த யோசனை குறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பி;ன்னர் வாக்கெடுப்பை நடத்துவதற்கு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்கெடுப்பிற்கு கட்டாயம் ஆதரவளிக்குமாறு ஆளும் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதம ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, ஏனைய கட்சிகளின் கருத்தை பொருட்படுத்தாது முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.