பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையும் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவு பெற்றுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டனியின் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ரவீந்திர சமரவீர ஆகியோருடன் முதலாளிமார் சம்மேளனத்தினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையை நடத்த கடந்த இரு தினங்களாக திட்டமிட்டிருந்தபோதிலும், பல்வேறுக் காரணங்களுக்காக தள்ளிப் போடப்பட்டிருந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 700 ரூபாயாக அதிகரித்த கூட்டு ஒப்பந்தத்தில் கைகெழுத்திட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தியும் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள இந்த பேச்சுவார்தையில் முக்கிய தீர்மானம் எட்டப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.