மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கை நாளை மறுதினம் எட்டாம் நாள் வெளிவரும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த 23ம் நாள் மன்னாரில் இருந்து கொழும்பு செல்லப்பட்டு மறுநாள் புளோரிடாவில் உள்ள னுநநவய யுயெடலவiஉள யபநnஉல ஆய்வு கூடத்துக்கு காபன் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிபுகளானது எக்காலப்பகுதியில் இப்படுகொலைகள் நடைபெற்றிருக்கலாம் என்பதை தீர்மானிப்பனவாக இருக்கும்
இந்நிலையில் இன்று 139வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுவரை 312 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 297 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 27 சிறார்களுடைதாக காணப்பட்டதாக இந்த அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
போருக்குப் பின்னரான கடந்த 10 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான பல்வேறு மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவொரு தீர்க்கமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.