ஈழத்தமிழர்கள் மீது சட்டபூர்வமாகப் புரியப்படும் அடக்குமுறைகள் நிறுத்தப்படாவிட்டால், மேலும் மோசமான அழிவு எதிர்காலத்தில் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரை ஏற்பட்ட அழிவுகளை விட இந்த அழிவுகள் மோசமானவையாக இருக்கும் என்று அவர் எதிர்வு கூறியுள்ளார்.
கடந்த 2017 ஜூலையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் அடிப்படையில் அவர் தயாரித்த விரிவான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் எதிர்வரும் கூட்டத்தொடரில் சமர்;ப்பிக்கப்படவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் முற்றாக மாற்றப்பட்டு, சர்வதேச தராதரங்களுக்கு ஏற்றதாக மாற்றப்படவேண்டுமென அவர் கேட்டுள்ளதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படக் கூடாதெனவும் கேட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறையில் கைதிகள் மனிதத்தன்மையற்ற வகையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப் போரின்போது புரியப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் வகையில் மனித உரிமைச் சபைத் தீர்மானம் 30ஃ1 முழுமையாக நடைமுறைப்படுத்தப ;படவேண்டுமெனவும் எமர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.