உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மால்பாஸ் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக ெகாண்டு உலக வங்கி செயல்படுகிறது. பல்வேறு நாடுகளின் முக்கிய திட்டங்களை செயல்படுத்த கடன் வழங்குவது உள்ளிட்டவை இதன் பணிகளாகும். இந்த வங்கியின் தலைவராக தென்கொரியாவை சேர்ந்த ஜிம் யோங் கிம் பணியாற்றி வந்தார். அவரது பதவிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜிம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த பதவிக்கு இந்தியாவை சேர்ந்த பெப்சி நிறுவனத் தலைவர் இந்திராநூயி உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மால்பாஸ் (62) என்பவர் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். தற்போது அமெரிக்க கருவூலத்துறையின் சர்வதேச விவகாரங்களுக்கான இணை செயலாளராக மால்பாஸ் பதவி வகித்து வருகிறார்