சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த பிஜாப்பூர் மாவட்டத்தில், சிறப்பு பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கு இடையே நடந்த மோதலில் 10 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, பிஜாப்பூர் எஸ்.பி., மோகித் கார்க் கூறியுள்ளார்.