நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானம் ஒன்று சனிக்கிழமை இரவு சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு புறப்பட்டது. சீனாவில் தரை இறங்க அனுமதி கிடைக்கவில்லை ஆதனால் விமானம் மீண்டும் ஆக்லாந்துக்கே திரும்பி வந்த்து.
ஆக்லாந்து-ஷாங்காய் விமானத்தின் மொத்த பயண நேரம் 10 மணி நேரம். 5 மணிநேர பயணத்துக்கு பிறகு விமானத்தின் அதிகாரிகள் சைனாவில் தரையிறங்குவதற்கு உரிய அனுமதி இல்லாமல் புறப்பட்டு வந்து விட்டதை உணர்ந்தனர். விமானத்திலிருந்து சீனாவில் தரையிறங்க அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.
பாதிப்பயணத்தில், நடுவானில் இருந்து விண்ணப்பம் அனுப்பி அனுமதி பெற முடியாது என்று ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்து விட்டது. எங்களுக்கு வேறு வழி இல்லாமல் மீண்டும் ஆக்லாந்து நகரத்துக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் இந்த சிரமத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று விமானி ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
பயணிகளும் வேறுவழியில்லாமல் வாய்மூடி மௌனமாக இருந்தனர் சீனாவில் தரையிறங்க வேண்டிய நேரத்தில், புறப்பட்ட இடத்திலேயே விமானம் மீண்டும் நியூசிலாந்தில் தரை இறங்கியது.