ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரியொருவரை இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு நொவெம்பர் திங்கள் இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடiமாயற்றி வந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி ஒருவரின் இல்லத்திற்கு சென்று, தம்மை இராணுவத்தினர் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இரண்டு பேர் ஆயுத முனையில் அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காவல்துறை திணைக்களத்தை அரசுத் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத்தினர் இவ்வாறான எந்தவொரு அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்று அரச தரப்பு மறுத்துள்ளது.