ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40-வது அமர்வுகளில் இலங்கை தொடர்பிலான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் எதிர்வரும் மார்ச் 8ம் நாள், இலங்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கை தொடர்பிலான பிரதியொன்று இலங்கை அரசாங்கத்திற்க முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இலங்கைக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா, கனடா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பங்கேற்கும் இலங்கை குழு பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் உயர் மட்டக்குழுவொன்று பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.