சர்வதேச விசாரணை வலியுறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வடக்கு- கிழக்கில் கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கையொப்பத்தை சேர்ப்பதற்கு தீர்மானித்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஷ்வரி தெரிவித்துள்ளார். குறித்த கையொப்பத்தை ஐக்கிய நாடுகளின் 40 ஆவது அமர்வில் சமர்ப்பித்து, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.