காஷ்மீரில் நடந்த தாக்குதல் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.ஸ்ரீநகரில் நிருபர்களை சந்தித்த ராணுவ அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் திலான் நிருபர்களிடம் கூறுகையில், ஆயுதம் ஏந்திய காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகளை உடனடியாக பாதுகாப்பு படையிடம் சரண் அடைய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்த வேண்டும்.
யாராவது ஆயுதம் ஏந்தினாலும், அவர்களையும் வீழ்த்துவோம். புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனை சுட்டு கொன்றோம். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் ராணுத்தின் குழந்தை. அதனை பாகிஸ்தான் ராணுவம் தான் கட்டுப்படுத்தி வருகிறது. புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ, ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு தொடர்பு உள்ளது. இதில் சந்தேகம் இல்லை. பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மோதல் நடக்கும் இடங்களில் இருந்து பொது மக்கள் விலகி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.