சுவிஸ் தூதுவரலாயத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பிரதிநிகள் சிறீலங்காவிற்கான பதினேழு நாடுகளுடைய தூதுவர்களை நேற்று கொழும்பில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரனை வேண்டுமெனவும் அதற்கான கால அவசாகம் கொடுக்கப்படக் கூடாது எனவும், காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால்(OMP) எந்தவொரு பயனுமில்லை எனவும் அவர்களிடம் நாம் காணாமலாக்கப்பட்டோரின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு கோரியபோது அதனை அவர்கள் நிறைவேற்றவில்லை அத்தோடு அவர்களின் செயற்பாடுகள் எமக்கு திருப்தியளிக்கவில்லை எனவே எமக்கு அவ் அலுவலகம் தேவையில்லை எமக்கு நேர்த்தியானவகையில் சர்வதேச நீதிமன்றம் மூலமான தீர்வு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர் .
நாம் பன்நாட்டு பிரதிகளுக்கு எமது நிலைப்பாட்டினை தெளிவாக விளக்கியுள்ளோம் அவர்கள் எம்மைப் புரிந்துகொண்டு எம்நிலையினை சர்வதேச அரங்கில் பேசுவார்களென்று நம்புகிறோம் என வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் எட்டு மாவட்டங்களின் இணைப்பாளர் திருமதி. யோசராசா கனகரஞ்சினி அவர்கள் தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் 25 ம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரை தேடியலையும் அனைத்து மாவட்ட மக்களும் இணைந்து
கிளிநொச்சியில் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை நடாத்த இருக்கிறோம் ஆகையால் பொது அமைப்புக்கள்,
மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழகமாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வேறுபாடின்றி கலந்துகொண்டு இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வேண்டிநிற்கிறோம்
எனவும் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்டோருக்கான உறவுகளின் சங்கப் பிரதிநிகள் கேட்டுக்கொண்டனர்…..