போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மன்னித்து மறந்து செயற்படலாம் என்ற போதிலும் அது உலக அளவில் ஓர் பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளக விசாரணைப் பொறிமுறைமை தொடர்பிலான நம்பிக்கையீனத்தினால் சர்வதேச நீதி விசாரணைப் பொறமுறைமை ஒன்று அறிமுகம் செய்ய வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட இராணுவ அதிகாரிகள், அரசியல் தலைமைகள் போன்றோர்கள் பற்றிய விபரங்களை உலகிற்கு அம்பலப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனக்கூறுவது சிங்கள பௌத்த வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியாகவே நோக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.