அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் டராம்பின் வரிவிதிப்பு கொள்கைகளினால் கனேடியர்களை விடவும், அமெரிக்கப் பிரஜைகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
அலுமினியம் மற்றும் உருக்கு தொடர்பிலான வரி விதிப்பினால் அமெரிக்காவே கூடுதலான பாதிப்பினை அனுபவித்து வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவிற்கான அமெரிக்க தூதுவர் கெல்லி கிராப்புடன் (முநடடல ஊசயகவ) சந்திப்பின் போது டக் ஃபோர்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரி ஊடாக உருவாக்கப்படும் ஒவ்வொரு தொழில் வாய்ப்பின் ஊடாகவும் 16 தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளினதும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்த வரி விதிப்பு கொள்கைகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.