காலநிலை மாற்றம் தொடர்பான இலக்குகள் இரட்டிப்பாக உயர்த்தப்பட வேண்டுமென சுவிடன் நாட்டு சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான இளம் மாணவி க்ரெட்டா துன்பெர்க் ) கோரியுள்ளார்.
16 அகவையுடைய துன்பெர்க் சுற்றுச் சுழல் பாதுகாப்பு முனைப்புக்களுக்காக வகுப்புப் புறக்கணிப்பு செய்ததன் மூலம் அனைவரினதும் கனத்தை ஈர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை தடுப்பது குறித்த இலக்குகளை இரட்டிப்பாக உயர்த்த வேண்டுமென அவர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியுள்ளார்.
உலகின் மிகப் பெரிய ஆபத்துக்களில் ஒன்றாக காலநிலை மாற்றம் உருவாகி வருவதாகவும், பேராபத்துக்களை உருவாக்கக் கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பரிஸ் உடன்படிக்கை தொடர்பில் எதிர்வரும் 2030ம் ஆண்டின் இலக்குகள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.