ரொறன்றோ சமூக வீட்டு வசதி அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக பதவி வகித்து வந்த கதி மில்சம் பதவி நீக்கப்படுவதாக அந்த அமைப்பின் நிர்வாகசபை அறிவித்துள்ளது.
ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்ட விடயத்தில் அவர் தவறு புரிந்தாரெனக் கூறப்பட்டு டிசம்பரில் அவர் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.
அவர் உரிய நடைமுறைகளையும், விதிகளையும் பின்பற்றவில்லையென மூன்றாந் தரப்பு விசாரணையில் முடிவு செய்யப்பட்டதால், அவர் உடனடியாக பதவி நீக்கப்படுவதாக நிர்வாகசபை அறிவித்தது.
நிர்வாகசபையின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ரொறன்றோ மாநகர முதல்வர் ஜோன் ரோறி தெரிவித்துள்ளார்.