வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாதென தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும் இணையத்தின் ஊடாக வாக்களிப்பது குறித்த சட்டமூலம், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், மாநிலங்களவையில் இது நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பித்தக்கது.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து இந்திய தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளதாவது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இணையத்தின் ஊடாக வாக்களிக்க முடியாது எனவும் அவர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்று, வாக்குப்பதிவு நிலையங்களிலேயே வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடவுச்சீட்டை, வாக்களிக்கும் நிலையங்களில் காட்டி தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்” என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது