அலுமினியம் மற்றும் உருக்குப் பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி உடனடியாக நீக்கப்பட வேண்டுமென கனடாவின் மூன்று மாகாண முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட், சஸ்கற்ரூன் முதல்வர் ஸ்கொட் மோய் (ளுஉழவவ ஆழந ) மற்றும் நியூ பிரவுன்ஸ்விக்கின் முதல்வர் பிளேய்ன் ஹிக்ஸ் (டீடயiநெ ர்பைபள) ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
வொஷிங்டனில் நடைபெற்று வரும் தேசிய ஆளுனர்கள் பேரவையின் கூட்டத்தில் , கனடாவின் மூன்று மாகாணங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கைகளினால் குறித்த மாகாணங்களில் பாரியளவில் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்பட்ளட்ள நிலையில், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ, சஸ்கற்ரூன் மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் ஆகிய மாகாணங்களின் தங்களுக்கே உரிய தொனிகளில் வித்தியாசமான அணுகுமுறைகளில் அலுமினிய, உருக்க வரி விதிப்பினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.