ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்படுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருக்கமாட்டோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஸ் அழகிரி தெரிவித்துள்ளார் !
எழுவர் விடுதலைக்கு ராகுல் காந்தி ஆட்சேபனை இல்லை என தெரிவித்த பிறகும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசு அதை எதிர்த்து பேட்டி அளித்தார். இந்த நிலையில் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி எழுவர் விடுதலையை ஏற்றுக்கொள்வோம் குறுக்கே நிற்கமாட்டோம் என தெரிவித்துள்ளார். இது தேர்தல் என்பதால் இப்படி அதிரடி அறிவிப்புக்கள் வருவது வழமை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.