ஓடவாவில் நடைபெறவுள்ள சர்வதேச குழுவொன்றின் அமர்வில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு Facebook, கூகிள் ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா, கனடா உட்பட ஒன்பது நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று பொய்ச் செய்திகளைக் கையாள்வது குறித்து எதிர்வரும் மே மாதம் ஓடவாவில் அமர்வொன்றை நடத்தவுள்ளது.
லண்டனில் நடைபெற்ற முன்னைய அமர்வில் முன்னிலையாகுமாறு மார்க் ஸூக்கர்பேர்குக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துப் பதிலுக்குத் தமது நிறுவன உயரதிகாரிகளை அனுப்பியிருந்தார். அந்த அமர்வில் உரிய பதில்கள் வழங்கப்படவில்லையென்பதால், ஓடவா அமர்வில் வேறு நபர்கள் பதிலுக்குச் சாட்சியமளிக்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.