வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வடக்கு மாகாணம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
அதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என்பன முடக்கப்பட்டுள்ளன.
அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதுடன், சந்தையில் கறுப்பு கொடி கட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கிளிநொச்சி அரச பேருந்து சாலையில் அனைத்து பேருந்துகளும் தரித்து வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்திலும் பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டமின்றி நகர் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
அவ்வாறே வவுனியா மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகர் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு உள்ளுர் பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
எனினும் வெளியூருக்கான சேவைகள் மாத்திரம் இடம்பெற்று வருவதோடு, அரச திணைக்களங்கள் வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அதேபோல், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள மாபெரும் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
அதன்படி மன்னார் மாட்டத்திலும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் பஸார் பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி தமிழ், முஸ்ஸிம் வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
மன்னாரிலிருந்து செல்லும் அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு குறிப்பிட்டளவு மாணவர்களே சமூகமளித்துள்ளதோடு, போக்குவரத்து சேவைகள்
அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
முடக்கப்பட்டுள்ளமையினால், அதிகளவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை.