மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா முழுமையான நிறைவேற்ற பிரித்தானியா ஊக்குவிக்கிறது.
மேலதிக காணிகளை விடுவிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும், இழப்பீடு வழங்கும் செயலகத்தை உருவாக்கும் முடிவையும் பிரித்தானியா பாராட்டுகிறது.
தற்போதைய 40 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா முன்வைக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.