கனடாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தலைமையிலான லிபரல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலப் பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் கனேடியர்கள் வாழும் காலமாக தற்போதைய காலம் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கைகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லிபரல் அரசாங்கத்தின் சிறுவர் நலன் திட்டம் மற்றும் பொருளாதாரத் திட்டங்களினால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு லிபரல் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட போது இருந்த வறிய மக்களின் எண்ணிக்கையை விடவும் தற்பொழுது அந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.