அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்றாம்ப் ஓர் மோசடிகாரர் எனவும் இனவாதி எனவும் அவரது பிரத்தியேக சட்டத்தரணியாக கடமையாற்றிய மைக்கல் கோஹென் (Michael Cohen) கொங்கிரஸ் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார்.
2016ம் ஆண்டு அரச தலைவர் தேர்தலின் பொது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளின்ரனுக்கு எதிராக விக்கிலீக்ஸ் ஊடாக அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்பதனை ட்றம்ப் முன்கூட்டியெ அறிந்திருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொஸ்கோவில் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்க நாட்டம் காட்டிய ட்றம்ப், ரஸ்யாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பவில்லை என்றும் கோஹென் தெரிவித்துள்ளார்.
ட்றம்ப் தனது பண்டக்குறியீடுகளை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்தாரே தவிர நாட்டை அபிவிருத்தி செய்யம் உத்தேசம் அவருக்கு கிடையாது என்றும் அவர் கொங்கிரஸ் சபை முன்பாக இன்று அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை எனவும் தனக்கு பெருமை தேடிக் கொள்ளவும் சொத்துக்களை அதிகரிக்கவுமே ட்றம்ப் முயற்சித்தார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.