இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபை மேலதிக கால அவகாசம் வழங்கக் கூடாதென வலியுறுத்தி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்களின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் ஒன்று இன்று இடம்பெற்றது.
மன்னார் பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகிய ஊர்வலம், சதொச வளாக மனிதப் புதைகுழிப் பகுதியைச் சென்றடைந்து, அங்கு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் மன்னார் மாவட்ட செயலத்திற்கு ஊர்வலமாக சென்றவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இலங்கை நீதிப் பொறிமுறையில் இருந்து தப்புவதற்கு அனுமதிக்கப்படக் கூடாதெனவும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டுமெனவும், மன்னார் மனிதப் புதைகுழி குறித்த கேள்விகளுக்குப் பதில் வழங்கப்படவேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்;வைத்தார்கள்.
மேலும் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று, ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக அருட்தந்தை ஜெயபாலம் குரூஸ் அடிகளாரிடம் கையளிக்கப்பட்டது.