கஷ்மீரின் Budgam பகுதியில் எம்.ஐ.–17 ரக இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று நொருங்கி வீழ்ந்ததில் இரண்டு விமானிகள் உட்பட அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் விமானப்படை வீரர்கள் என்று தெரியவருகின்றது.
பக்கிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்திய இரண்டு இந்திய போர் விமானங்கள் மீது பக்கிஸ்தான் நடத்திய தாக்குதலில் அவற்றில் ஒன்று கஷ்மீரின் பக்கிஸ்தானின் எல்லைப் பகுதிக்குள்ளும், மற்றயது இந்திய எல்லைக்குள்ளும் வீழ்ந்தது.
பக்கிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் வீழ்ந்த MiG-21 போர் விமானத்தி;ன் விமானியான தாம்பரத்தைச் சேர்ந்த அபினந்தன் பேசும் காணொளியை பக்கிஸ்தான் வெளியிட்டது,
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள விமானி பாதுகாப்பாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு ஏப்ரல் மக்களவைத் தேர்தலை கருத்திற் கொண்டு தீவிரவாதம் என்ற பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு பக்கிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தியதாக பக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி குற்றம் சுமத்தினார்.
போர் என்பது தவறான முடிவாகும் என்று குறிப்பிட்டுள்ள பக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் ஹான், பேச்சுவார்த்தைக்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக நாட்டு மக்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.