காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகத்தின் பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தள்ளார்.
காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால் போனவர்கள் குறித்து ஆராய்வதற்காக பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
காணமல்போனோரின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் இலகுவான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்ட சில பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால் போனவர்களின் உறவினர்கள் எமது அலுவலகத்தினூடாக இலகுவான சேவைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து சில திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் சாலிய பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.