பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தனது பதவியை விட்டு விலகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்றூ ஷீயர் (யுனெசநற ளுஉhநநச) வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் சட்ட மா அதிபரினால் எடுக்கப்பட்ட சுயாதீன தீர்மானம் ஒன்றை உதாசீனம் செய்து பிரதமர் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எஸ்.என்.சீ லவாலின் (ளுNஊ – டுயஎயடin) விவகாரம் தொடர்பில் சட்ட மா அதிபர், நீதியமைச்சராக கடமையாற்றிய ஜோடி வில்சன் ராய்போல்டின் தீர்மானத்தை உதாசீனம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதமர் நாட்டை ஆட்சி செய்யும் தார்மீகப் பொறுப்பினை இழந்து விட்டதாக அன்ட்றூ ஷீர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ளுNஊ – டுயஎயடin விடயத்தில் தம்மீது பிரதமரின் அலுவலக அதிகாரிகள் உட்படப் பதினொரு பேர் அழுத்தம் பிரயோகித்தார்களெனவும், மறைமுகமாக அச்சுறுத்தல்களை விடுத்தார்களெனவும், முன்னாள் நீதியமைச்சரும், சட்டமா அதிபருமான ஜோடி வில்சன் றேபோல்;ட் நாடாளுமன்ற நீதிக்குழு முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும், தாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தொழில்வாண்மையுடனும், கிரமமான முறையிலும் செயற்பட்டுள்ளதாகவும் தவறிழைக்கவில்லை எனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
முன்ளாள் நீதி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தனது பதவியை விட்டு விலகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்றூ ஷீயர் வலியுறுத்தியுள்ளார்.