சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் மார்ச் 8ஆம் நாள் அரசியல் அரங்கில் அறிமுகமாகவுள்ளார் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் 8ஆம் நாள், கண்டி பொதுச் சந்தைப் பகுதியில் பாரிய பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.
வரும் தேர்தல்களை இலக்கு வைத்தே இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தக் கூட்டத்திலேயே பசில் ராஜபக்சவும் மேடையேறவுள்ளார்.
இதையடுத்து, வரும் 26ஆம் நாள் அனுராதபுர சல்காடோ மைதானத்தில் மற்றொரு பாரிய பேரணி நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.