எஸ்.என்.சீ லவலின் சர்ச்சை எதிர்வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 25 சதவீதமான கனேடிய பிரஜைகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எஸ்.என்.சீ லவலின் சர்ச்சை வாக்களிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அதனை தவிர்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
குறித்த நிறுவனம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அதனை லிபரல் அரசாங்கம் மூடி மறைக்க முயற்சித்தது எனவும் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த விடயம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சரும் சட்டமா அதிபருமான ஜோடி வில்சன் றேபோல்ட் பதவி விலகினார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த நிறுவன விவகாரம் மக்களின் வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான்கில் ஒரு கனேடியர் தெரிவித்துள்ளனர்.