வரும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு அளித்துள்ள நிலையில், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் நேற்று சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார்.
இதையடுத்து கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தூத்துக்குடி தொகுதியை கேட்டு இருக்கிறோம்.
அதிமுகவிடம் தூத்துக்குடி தொகுதியை பாஜக கேட்டுள்ளது. அதேபோல் பாஜக பலமாக இருக்கும் 5 தொகுதிகளை நாங்கள் கேட்டு இருக்கிறோம்.
இது தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். பாஜக போட்டியிடும் அனைத்து தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.