காலநிலை மாற்றம் தொடர்பில் மிகுந்த கரிசனை கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் பறாக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
கல்கரிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
சுத்தமான ஆபத்து அற்ற சக்தி வளங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது எனவும், அவ்வாறு தறும் பட்சத்தில் உலக அளவில் பாரிய ஆபத்துக்கள் எதிர்நோக்கப்படுவதனை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றமானது காரையோரப் பகுதிகளில் வாழும் மக்களை வெகுவாகப் பாதிக்கும் எனவும், பூச்சிகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்கால பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு மாசுபட்ட ஓர் சூழலை விட்டுச் செல்வது எந்த வகையில் நியாயமானது என்று பறாக் ஒபாமா கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே காலநிலை மாற்றம் தொடர்பில் மிகுந்த கரிசனை எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது அரசியல் தலைமைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.