எதிர்வரும் கனேடிய மத்திய பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வீடுகளுக்கு வெப்பமூட்டும் செயற்பாட்டுக்காக அறவிடப்படும் கட்டணத்தில் இருந்து, மத்திய அரசுக்கான வரியை இல்லாது செய்வதாக பழமைவாதக் கட்சியின் தலைவர் அன்ட்ரூ ஷியர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வீடுகளுக்கான அனைத்து சக்திவள வினியோகங்களுக்குமான ஐந்து வீத வரியிலிருந்து மீளளிப்புக்களை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்மூலம் கனேடியர்கள் சராசரியாக ஆண்டுக்கு 107 டொலர்களை மீதப்படுத்த முடியும் என்றும் அன்ட்ரூ ஷியர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வரி மீளளிப்பு 200 டொலர்களுக்கு மேட்படாத வகையிலேயே இருக்கும் என்றும், வர்த்தகத் தேவைளுக்கான சக்திவள பயன்பாடுகளுக்கு இந்தச் சலுகை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கனேடிய மத்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முற்கூட்டிய தேர்தல் வாக்குறுதியாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.