விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமான விபத்தில் எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு கிடையாது என்று அந்நாட்டு விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈ.ரீ.320 என்ற விமானம் எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்கு புறப்பட்டுச் சென்று சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
149 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட மொத்தம் 157 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 கனேடியர்களும் எட்டு அமெரிக்கர்களும் உள்ளடங்குகின்றனர்.