பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு, வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில், நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே, மஹிந்த இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுப்பதால், அதனை நீக்கி அதிலுள்ள சில விடயங்களை சாதாரண சட்டத்துக்குள் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இலகுவாக நீக்க முடியாது, அவசர சட்டத்தின் ஊடாக மாத்திரமே நீக்க முடியுமென்றும் மஹிந்த கூறினார்.





