மனிதனின் மூளைச் செயற்பாட்டை கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பமொன்றை வன்கூவர் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.
“brain bolt” ” எனப்படும் தொழில்நுட்பமே இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயாளியின் மண்டை ஓட்டில் இந்தக் கருவியை பொருத்தி மனித மூளையின் செயற்பாட்டை தத்ரூபமாக கண்டறிந்து கொள்வதற்கு முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு தோறும் வாகன விபத்துக்கள், விழுதல் போன்ற அனர்த்தங்களினால் சுமார் 160000 கனேடியர்களின் மூளைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூளை பாதிப்புக்கு இலக்கான ஒரு மில்லியன் வரையிலான கனேடியர்கள் பேசுவதற்கு, நடப்பதற்கு, பார்ப்பதற்கு முடியாத நிலையில் இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மூளையில் பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட தொழில்நுட்பம் ஒன்றை வன்கூவர் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.