சீனாவின் ஹ_வாவே தொழில்நுட்ப நிறுவனம் தொடர்பில் அமெரிக்கா, ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் ஹ_வாவே கருவிகள், 5ஜீ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளப் போவதில்லை என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹ_வாவே கருவிகளைப் பயன்படுத்துவதனால் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அமெரிக்கா தனது நேச நாடுகளிடம் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஹ_வாவே நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹ_வாவே அல்லது ஏனைய சீன தொழில்நுட்பங்கள் ஜெர்மனியில் 5ஜீ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதித்தால், கடந்த காலங்களைப் போன்றே பாதுகாப்பு தொடர்புகளை ஜெர்மனியுடன் பேண முடியாது போகும் என அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதுவர் ரிச்சர்ட் க்ரினெல் (சுiஉhயசன புசநநெடட) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஒஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் ஹ_வாவே கருவிகள் 5ஜீ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.