கோவா மாநில முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் பரிக்கர் காலமானார்.
தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர், சிகிச்சை பலனின்றி 63வது அகவையில் காலமானார்.
புற்றுநோய்க்காக மும்பாய், டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல்வர், சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார்.
கடந்த ஜனவரி கோவா சட்டப்பேரவையில் வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த அவர், பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 5ம் நாள் கோவா திரும்பினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் ட்விட்டரில், மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழப்பு செய்தி மிகவும் வருத்தம் அடைய செய்கிறது என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
2222
நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என்று கர்நாடக கொங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையிலேயே கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் இவ்வேண்டுகோளினை முன்வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது டுவிட்டரில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரும் கர்நாடகாவிலேயே போட்டியிட்டுள்ளனர்.
எனவே இந்தியாவின் அடுத்த பிரதமராக தெரிவு செய்யப்பட இருக்கும் ராகுல் காந்தியும் இங்கு போட்டியிட வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.