பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தலைமையிலான லிபரல் அரசாங்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நிதி அமைச்சர் பில் மோர்னோ வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூத்த பிரஜைகளுக்கு நலன் திட்டங்களை வழங்கவும், வீட்டுக் கொள்வனவுகளை இலகுவாக்கவும், பயிற்சிகளை வழங்கவும் வரவு செலவுத்திட்டத்தில் முக்கிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
எஸ்.என்.சீ லாவிலின் சர்ச்சையிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய வகையில் ஒர் வரவு செலவுத்திட்டத்தை அரசாங்கம் பெரும்பாலும் சமர்ப்பிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனேடிய மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்ற முடியும் என்பதனை நிரூபணம் செய்யக் கூடிய வகையில் வரவு செலவுத் திட்டத்தை லிபரல் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.