உலகின் முதனிலை தேடுதள நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேடுதளத்தில் விளம்பரங்களை பிரசூரிப்பது தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் அண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் விதி மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எட்சென்ஸ் என்னும் வழியாக மட்டும் விளம்பரம் செய்வதற்கும் ஏனைய வழிகளை முடக்குவதற்கும் கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.