மொஸாம்பிக் மற்றும் சிம்பாப்பே ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய புயல் காற்றுத் தாக்கத்தினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐக்க்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த ஆபிரிக்க நாடுகளை ஊடறுத்துச் சென்ற புயலுக்க இடாய் என பெயரிடப்பட்டிருந்தது.
மொஸாம்பிக், சிம்பாப்வே மற்றும் மாலாவி ஆகிய நாடுகளில் கடுமையான காற்று, மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கைப் பேரழிவு நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
மொசாம்பிக்கில் புயல் காற்றுத் தாக்கத்தினால் குறைந்தபட்சம் ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சிம்பாப்வே மற்றும் மாலாவி ஆகிய நாடுகளிலும் மழை வெள்ளம் காரணமாக பாரிய சிக்கல்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.