லிபரல் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நியாயமானது என்று நிதி அமைச்சர் பில் மோர்னேயுh தெரிவித்துள்ளார்.
நுகர்வோரின் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடிய வகையில் முதலீடு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் மோர்னோ நேற்றைய தினம் மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத்திட்ட யோசனையை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மத்திய அரசின் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்றாரியோ மாகாண மக்களுக்குப் பயன் அற்றதென மாகாண நிதியமைச்சர் விக் ஃபிடெலி குறைகூறியுள்ளார்.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள கார்பன் வரி ஒன்றாரியோவில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், சிறு தொழில் நிறுவனங்களுக்கும், குடும்பங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக விக் ஃபிடெலி கூறினார். ஆனால், கார்பன் வரி குறித்து மத்திய அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லையென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் வகையான நடவடிக்கைகளைக் கொண்டிருப்பதாகவும், அது ரொறன்றோ நகருக்கு நன்மை பயப்பனவாக காணப்படுகின்றதென மாநகர முதல்வர் ஜோன் ரோறி குறிப்பிட்டுள்ளார்.
0000