சமூக ஊடகங்களில் கடும்போக்கு மற்றும் குரோத உணர்வைத் தூண்டும் விடயங்களை நீக்குமாறு சமூக ஊடகங்களை கட்டாயப்படுத்துவது குறித்து கனடா கவனம் செலுத்தி வருகின்றது.
க்கிறிஸ்ற்சேர்ச்( ஊhசளைவஉhரசஉh) குபெக் மற்றும் பிட்ஸ்பேர்க்( Pவைவளடிரசபா) நகரங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது இணையத்தின் ஊடாக குரோத உணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணையத்தின் ஊடாக குரோத உணர்வைத் தூண்டும் பிரச்சாரங்களை தடுப்பது குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரல்ஃப் கூடேல் (சுயடிh புழழனயடந) தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் குரோத உணர்வு மற்றும் கடும்போக்குவாதம் என்பன பிரச்சாரம் செய்வதனை தவிர்க்குமாறு சமூக ஊடக நிறுவனங்களை வற்புறுத்தக் கூடிய வகையிலான சட்டமொன்று அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.