ஒன்டாரியோவில் மின்சாரத்தை சேமிப்பதற்கான திட்டங்களை முதல்வர் டக் ஃபோர்ட்டின் அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
குறிப்பாக மின்சாரத்தை சேமிப்பது குறித்த ஊக்குவிப்புத் திட்டங்களை ரத்து செய்துள்ளது.
முன்னதாக மின்சாரத்தை வினைத் திறனாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தும் தரப்பினருக்கு விசேட சலுகைகள் வெகுமதிகள் வழங்கப்பட்டு வந்தன.
எனினும் முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை ரத்து செய்துள்ளது.
உதாரணமாக நீச்சல் தடாகங்களில் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய ஓர் நீர் பம்புகளை பொருத்தினால் அதற்கு அரசாங்கம் ஊக்கிவிப்புத் தொகைகளை வழங்கி வந்தது.
எனினும், தற்போதைய அரசாங்கம் இந்த கொடுப்பனவுத் திட்டங்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரத்தை சேமிப்பது குறித்த திட்டங்களின் ஊடாக நன்மைகள் கிடைக்கப்பெறவில்லை என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.