கேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தற்போதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை என கேப்பாபுலவு நிலமீட்பு போராட்ட குழுவின் இணைப்பாளர் ஆசிரியர் அரியகலா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட்டத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு எங்கள் காணிகளை விடுவிக்குமாறு போராட்டத்தினை தொடங்கியுள்ளபோது அரசிற்கு இரண்டாவது தடவையாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் எமது வாழ்நிலங்கள் விடுவிக்கப்படவில்லை மாறாக படைமுகாம்களை நிதந்தரமாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியல் சூழலில் பாக்கின்ற பொழுது அடுத்து தேர்தல் ஒன்றே நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளே இருக்கின்றன அதில்யார் வெற்றிபெறப்போகின்றார்கள் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று சிங்கள தலைவர்கள் சிந்திக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் வீதிகளில்இறங்கி பாராடிக்கொண்டிருக்கின்றார்களே என்பதெல்லாம் அவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை இதனைப்பற்றி அரசு கருத்தில் கொள்வதே கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் இலங்கை அரசிற்கு கால அவகாசத்தினை வழங்குவதன் ஊடாக மக்கள் வாழவுரிமைக்காக முன்னெடுக்கின்ற போராட்டங்கள் முற்றாக மலினப்படுத்துவதற்கே வழிஏற்படுவதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.