பிரதம நீதியரசர் பதவிக்காக முன்னாள் நீதி அமைச்சர் ஜோடி வில்சன் ராய்போல்ட் செய்த பரிந்துரையை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே நிராகரித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டில் மானிடோபவின் நீதியரசர் ஒருவரை பிரதம நீதியரசர் பதவிக்காக நியமிக்குமாறு அப்போதைய நீதியரசர் ராய்போல்ட் பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நீதியரசர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு சார்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் தமக்கும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடேவிற்கும் இடையில் முரண்பாடுகள் எதுவும் கிடையாது என ராய்போல்ட் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் பதவி நியமனம் தொடர்பில் பிரதமருக்கும் அப்போதைய நீதி அமைச்சருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வந்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.